உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

பாரம்பரிய டோலர் மீன்பிடி தடையை நீக்குமாறு – மீனவர்கள் கோரிக்கை.!!!

(கற்பிட்டி நிருபர் – சியாஜ்)

கற்பிட்டியின் பாரம்பரிய மீன்பிடி தொழில்களில் ஒன்றான டோலர் படகு மீன்பிடி தொழில், கற்பிட்டி கடற்பரப்பில் மாத்திரம் தடை செய்யப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை அத்தொழிலுக்கான அனுமதி வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், குறித்த தடைக்கு மாற்றாக எந்தவொரு மாற்றுத் தொழில் ஏற்பாடுகளும் கடந்த அரசினால் மேற்கொள்ளப்படவில்லை என்றும், இதனால் பல கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் கடுமையான வாழ்வாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

டோலர் படகு மீன்பிடி தொழில் தடை காரணமாக, டோலர் படகு உரிமையாளர்கள் பல இலட்சக்கணக்கான ரூபா முதலீடுகளை இழந்துள்ளதாகவும், கடனாளிகளாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில டோலர் படகுகள் நீரில் மூழ்கி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், இன்னும் பல படகுகள் பகுதி அளவில் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

இந்த மீன்பிடி தடையானது கற்பிட்டி பிரதேசத்தின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் விளைவாக இறால் மீன்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கற்பிட்டி துறைமுகத்தின் வருமானமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம், மன்னார், நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் டோலர் படகு மீன்பிடி தொழில் தடையின்றி நடைபெற்று வருவதாகவும், கற்பிட்டியில் மாத்திரம் ஏன் இத்தொழில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாக தலையிட்டு, கற்பிட்டி கடற்பரப்பில் டோலர் படகு மீன்பிடி தொழிலுக்கான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703739

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time