காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட: 509 குடும்பங்களுக்கு அரசு அவசர நிதி உதவி.!!!
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் அவசர நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 509 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணத்திற்கான கொடுப்பணவுகள் வங்கிக் கணக்குகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன.
அனர்த்தத்தில் சிக்கிய ஆறு நபர்கள் கொண்ட குடும்பம் ஒன்றிற்கு ரூ. 10,500/- தொகை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே இந்த நிதி உதவிகள் வழங்கப்படுவதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் வேலை இழப்பு, சொத்து சேதம் உள்ளிட்ட சிரமங்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
பிரதேச அதிகாரிகள் தலைமையில் நடைபெறும் இந்த நிவாரணப் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.