உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

‘டிட்வா’ பேரிடர் நிவாரணத்திற்கு: ரியாத் இலங்கைத் தூதரகம் மூன்றாவது நிவாரணத் தொகுதி மற்றும் USD 80,000 நிதி உதவியும் வழங்கள்.!!!

‘டிட்வா’ சூறாவளி அனர்த்தத்தால் இலங்கையின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கை அரசால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில் ரியாத் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் தனது மூன்றாவது நிவாரணத் தொகுதியை அண்மையில் அனுப்பி வைத்துள்ளது.

2026 ஜனவரி 8ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட இந்த நிவாரணப் பொதிகள் அடங்கிய 40 அடி கொள்கலனில், சுமார் 19,000 அமெரிக்க டொலர் (SAR 71,000) பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் மேதகு அமீர் அஜ்வாத் அவர்களால், குறித்த நிவாரணப் பொருட்கள் ரியாத் நகரிலுள்ள டிரிகோ கார்கோ (Trico Cargo) நிறுவனத்தின் கிடங்கில் வைத்து அதன் நாட்டுப் பொறுப்பாளர் திரு. ஆண்ட்ரூ சின்னன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. இக்கட்டான பேரிடர் காலத்தில் மனிதாபிமான அடிப்படையில் இந்நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு இலவசமாகப் போக்குவரத்து செய்ய முன்வந்த டிரிகோ கார்கோ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வையும் உயரிய சேவையையும் தூதுவர் இதன்போது பாராட்டி நன்றிகளைத் தெரிவித்தார்.

தூதரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரால் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள், ஆடைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இந்த நிவாரணத் தொகுதியில் அடங்கியுள்ளன. அதனுடன், இலங்கையின் மீட்பு மற்றும் மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்காக சவூதியில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களால் சுமார் 80,000 அமெரிக்க டொலர் (SAR 300,000) நிதி சேகரிக்கப்பட்டு ‘தேசிய அபிவிருத்தி நிதிக்கு’ (Nation Building Fund) வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த மாதத்தில் 11,000 அமெரிக்க டொலர் பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களும், Energia LLC நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 43,000 அமெரிக்க டொலர் பெறுமதியான 8 உயர் திறன் டவர் லைட் ஜெனரேட்டர்களும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய்நாடு எதிர்கொண்டு வரும் இந்த தேசிய அவசர நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்று தாராள மனப்பான்மையுடனும் ஒற்றுமையுடனும் உதவிக்கரம் நீட்டிய சவூதி அரேபியாவிலுள்ள அனைத்து இலங்கை சமூகத்தினருக்கும், நன்கொடையாளர்களுக்கும் தூதுவர் அமீர் அஜ்வாத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் தூதரகத்தின் தலைமை அதிகாரி திரு. அனாஸ், முதல் செயலாளர் திரு. முனசிங்கே உள்ளிட்ட பல தூதரக உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703701

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time