வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் பஷீர் சேகு தாவூத்; இன்று விசேட துஆ பிரார்த்தனை.!!!
சுகயீனமுற்று கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்கள் நேற்றிரவு (04) வைத்தியசாலையிலிருந்து சுகதேகியாக வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் அவர்களின் தொடர்ச்சியான நலத்துக்காக இன்று (05) இஷாத் தொழுகையின் துஆ பிரார்த்தனை நிகழ்வு ஒன்று மீராகேணி ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பஷீர் சேகு தாவூத் அதிகாரத்திலிருந்தபோது இந்தப் பிரதேசத்தின் அனைத்து விடயங்களிலும் முன்னுரிமை கொடுத்தவர். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாக இந்த துஆ பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அவரின் பூரண சுகத்துக்காக பிரார்த்திக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.