இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்; முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலை.!!!
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்க இன்று (05) அந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில், விவசாய அமைச்சின் நிர்வாகச் செயல்பாடுகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் கட்டிடம் ஒன்றைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அந்தக் கட்டிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட விதம், வாடகை ஒப்பந்தத்தின் நடைமுறை மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில், அப்போது அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே, இன்று அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விசாரணைகள் தொடர்பில், தேவையாயின் மேலும் விளக்கங்கள் மற்றும் ஆவணங்கள் கோரப்படலாம் எனவும், விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.