முஸ்லிம் காங்கிரஸில் இணைகிறார்; முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – முஷாரப்.!!!
நாளை உத்தியோகபூர்வ நிகழ்வு – சாய்ந்தமருதில்.!!!
(கே.எ.ஹமீட்)
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது பொத்துவில் பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷர்ரப் அவர்களும் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபை ஏழு (07) உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொள்ளும் நிகழ்வு கட்சியின் தலைவர் அல்ஹாஜ் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களின் முன்னிலையில் நாளை 25.06.2025 (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாளிகைக்காடு பிரதான வீதியில் அமைத்துள்ள வாவா திருமண மண்டபத்தில் இடம்பெறும்.
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் அத்தோடு. அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்ட பட்டியல் வேட்பாளர்கள், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுவார்கள் என மாவட்ட செயற்குழு செயலாளர், ஏ.சி சமால்டீன் கூறியுள்ளார்.