மஹிந்த ராஜபக்ஷ – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு; இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல்.!!!
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று (22) பிற்பகல் மஹிந்த ராஜபக்ஷ வசித்து வரும் விஜேராம இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர புரிதலின் அடிப்படையில், பல்வேறு விடயங்ள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ X கணக்கில் தெரிவித்துள்ளார்.
இச்சந்தர்ப்பத்தில், உலகளாவிய முன்னேற்றங்களின் பின்னணியில் இந்தியா-இலங்கை இடையேயான பல்தரப்பட்ட மற்றும் பரந்துபட்ட கூட்டாண்மை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் உத்தியோகபூர்வ X கணக்கில் தெரிவித்துள்ளது.
இந்திய – இலங்கை உறவுகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் தொடர்பில் உயர் ஸ்தானிக் மஹிந்த ராஜபக்ஷவிற்கு விளக்கியதாகவும் உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி (SLPP) கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகரகாரியவசம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.