உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

உள்ளூராட்சி நிதி தொடர்பில்; ஜனாதிபதி அறிவிப்பால் புதிய மாற்றம்.!!!

என்னதான் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டாலும் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர, தேசிய மக்கள் சக்தி கைப்பற்றாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கப்படாது எனத் தெரிவித்ததாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்கியிருந்தது.

இந்த நிலையிலேயே அநுராதபுரம் பகுதியில் நேற்று (25) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தவர்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். அநுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வாறானவர்களை மக்கள் முழுமையாகச் சுத்தப்படுத்துவார்கள்

தற்போது ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரின் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் ஜனாதிபதி ஒருவரை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைத்துள்ளது

அத்துடன் கொள்ளை மற்றும் மோசடியில் ஈடுபடுவதற்காக உள்ளூராட்சி மன்றங்களுக்கு மத்திய அரசாங்கத்தினால் நிதி வழங்கப்பட மாட்டாது என்றே தாம் குறிப்பிட்டிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு இடம்பெறாது என கூறியதாக எதிர்க்கட்சியினர் கவலை வெளியிடுகின்றனர்.

ஆனால் கொள்ளை மற்றும் மோசடி இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிச்சயமாக நிதி ஒதுக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1230887

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time