இலவச ஆங்கிலக் கல்வியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.!!!
ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ.நாஸர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பிரதேசத்தில் இயங்கி வரும் இலவச ஆங்கிலக்கல்வியகத்தின் இரண்டாம் வருட பரிசளிப்பு விழா நேற்று (04) நடைபெற்றது.
கல்வி நிலையத்தின் இஸ்தாபகர் சமூக சேவகர் இராசையா அகிலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சந்திவெளி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் முன்னாள் மூன்று அதிபர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டனர்.
எட்டு மாத காலம் இலவசமாக ஆங்கிலக்கல்வி கற்று திறமைச்சித்தியடைந்த 15 மாணவர்கள் உள்ளிட்ட ஐம்பது மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன.
கடந்தகால போர்ச்சூழலின் போது புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வரும் சந்திவெளியைச்சேர்ந்த இராசையா அகிலேஸ்வரன் இக்கல்வி நிலையம் இயங்குவதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுள்ளார். இராசையா இலவச ஆங்கிலக் கல்வியகம் என்ற பெயரில் இக்கல்வி நிலையம் இயங்கி வருகிறது.
இந்நிகழ்வில் சமூகச்செயற்பாட்டாளரும் முத்தமிழ் கலைஞருமான பா.கதிஸ்வரன் மற்றும் கல்வியியலாளர்கள், ஆலயங்களின் குருக்கள், நிருவாகிகள் மற்றும் பெற்றார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
ஆங்கிலமொழிக்கல்வி மற்றும் தொழிநுட்பக்கல்வி ஆகிய துறைகளில் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டி சிறப்பான சமூகத்தைக்கட்டியெழுப்பும் நோக்குடன் இக்கல்வியகம் உருவாக்கப்பட்டதாக இஸ்தாபகர் அகிலேஸ்வரன் தெரிவித்தார்.





