ஸலாமத் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற – இலவச நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
ஆரையம்பதி ஸலாமத் ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாட்டில், மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய மாபெரும் நடமாடும் ஆயுர்வேத மருத்துவ முகாம் இன்று (10) பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது.
பள்ளிவாயலின் தலைவர் ஆதம் அலி தலைமையில் இடம்பெற்ற இவ்வைத்திய முகாமில், வைத்தியரகளான அஸ்பா, அப்தா ஆகியோர்களினால் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் நூறு பேருக்கும் அதிகமான பொதுமக்கள் வைத்திய முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இவ் இலவச மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, நோயாளிகளுக்கான மருந்துகளும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.











