உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

உயிாியல் பிரிவில் சாதனை படைத்து மருத்துவ பீடத்திற்கு தொிவான மாணவருக்கு; காத்தான்குடி மீடியா போரத்தினால் கெளரவிப்பு.!!!

(எம்.ஐ.அப்துல் நஸாா்)

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. உயா்தரப் பரீட்சை 2024 (2025) உயிாியல் பிரிவு பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 ஆம் இடத்தினையும் தேசிய மட்டத்தில் 13 ஆம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவா் எஸ்.ஏ.கே.பழீலுா்ரஹ்மானின் சிரேஷ்ட புதல்வா் மொஹமட் முன்ஷிப் அவா்களை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் சிரேஷ்ட ஊடகவியலாளா் எம்.எஸ்.எம்.நூா்தீன் தலைமையில் நேற்று (12) றையான் பீச் காா்டன் மண்டபத்தில் இடம் பெற்றது.

மேற்படி நிகழ்வில் சாதனை படைத்த காத்தான்குடி மத்திய கல்லூாி தேசிய பாடசாலை மாணவரான மொஹமட் முன்ஷிப் அவா்களுக்கு காத்தான்குடி மீடியா போரத்தினால் நினைவச் சின்னமும் பாிசும் வழங்கி கௌரவிக்குமளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளா் ரீ.எல்.ஜவ்பா்கான் காத்தான்குடி மீடியா போரத்தின் உப தலைவா் எஸ்.ஏ.கே. பழீலுா்ரஹ்மான், காத்தான்குடி மீடியா போரத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.டீன் பைரூஸ், ஊடகவியலாளா்களான எம்.ஐ.ஏ.மஜீட், எம்.ரி.எம்.யூனுஸ், ஏ.ரீ.எம்.றியாஸ், மௌலவி என்.எம்.எம்.நௌபா் (பலாஹி), எம்.எம்.எம்.அஸீம், பீ.எம்.பயாஸ் எம்.எஸ்.சஜீத் மற்றும் கௌரவமளிக்கப்பட்ட மாணவாி்ன் குடும்பத்தினரும் மற்றும் உறவினா்களும் கலந்து கொண்டனா்.

காத்தான்குடி மீடியா போரத்தினால் சிறந்த அடைவுகளைப் பெறும் போரத்தின் அங்கத்தவார்களின் பிள்ளைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது.

அண்மையில் க.பொ.த உயா்தரப் பரீட்சையில் சிறந்த அடைவுகளைப் பெற்ற காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினா்களின் பிள்ளைகளுக்கு கடந்த புதன்கிழமை (30) கௌரவமளிக்கப்பட்டது.

போரத்தின் செயலாளா் எம்.ஐ.அப்துல் நஸாா் அவா்களின் புதல்வி பாத்திமா நஸீபா, பொருளாளா் எம்.எப்.எம்.பஸால் ஜிப்ரி அவா்களின் புதல்வி பாத்திமா ஷஹாமா ஆகியோருக்கு கௌரவமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714122

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time