உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மாணவி உயர்தரப் பரீட்சையில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் – முதலாமிடம் பெற்று சாதனை.!!! 

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

வெளியான கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறு பேறுகளில் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவி முகம்மது மர்சூக் மஸா மிலாறூஸ் வர்த்தகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளார்.

காத்தான்குடி 5ம் குறிச்சி எஸ்.எம்.லேன் முகவரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மர்சூக் றசீதா தம்பதிகளின் புதல்வி யான இந்த மாணவி பொருளியல் கணக்கீடு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

இவர் GCE A/L கற்கும் போதே AAT கற்கை நெறியினை Digital Tutors LK நிறுவனத்தில் Online மூலமாக கற்று பூர்த்தி செய்ததுடன் அகில இலங்கை ரீதியிலும் Business Communication பாடத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவருக்கு Digital Tutors LK நிறுவனம் AAT மற்றும் GCE A/L தொடர்பில் மேலதிக வழிகாட்டலினையும் வழங்கியிருந்தது.

இவரின் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் தாய் காத்தான்குடி நகர சபை முகாமைத்துவ உதவியாளர் சகோதரர் கணக்காய்வு உத்தியோகத்தராக மட்டக்களப்பு அலுவலகத்தில் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714153

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time