காத்தான்குடியில் பெருநாள் பசார் மற்றும் களியாட்ட நிகழ்வு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம்.!!!
– எம்.ரி.எம்.யூனுஸ் –
காத்தான்குடி நகரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் பசார் மற்றும் களியாட்ட நிகழ்வு இன்று (21) சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பொது விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகர முதல்வர் எல். எஸ். எச். எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் மக்களுக்கான வணிக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த பெருநாள் பசார் நிகழ்வு மூலம் சமூக உறவை வலுப்படுத்துவதும், உள்ளூர் மற்றும் வெளியூர் வணிகர்களுக்கு ஆதரவு வழங்குவதும் முக்கிய நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளதாக நகரசபை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.

















