உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சுகாதார அமைச்ச்சின் அனுசரணையில்; மட்டக்களப்பில் பாரிய மருத்துவ முகாம்.!!!

(ஜே.கே)

சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கமைப்பில், ஆதித்தி கைத்தறி நிறுவனத்தின் அனுசரணையில் பொது போக்கு வரத்து வசதி குறைந்த களுவன்கேணி கிராமத்தில் விவேகானந்த வித்தியாலயத்தில் மாபெரும் மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது .

இம்மருத்துவ முகாமில் விழிப்புணர்வு கருத்தரங்கு, நடமாடும் பல் சிகிச்சைப் பிரிவு, மூக்கக் கண்ணாடி வழங்கல் போன்றன இடம்பெற்றன.

மருத்துவ முகாமில் வைத்தியர் நிரோஜன் , வைத்தியர் தனுசியா, வைத்தியர் ஸ்ரீ வித்யன்
மற்றும் தொழுநோய்க்கான பிராந்திய வைத்திய அதிகாரி லுபோஜிதா மற்றும் கண் சம்பந்தமான தொழில் நுட்ப உதவியாளர், பல் வைத்தியர் கிரிஷாந்தன் பங்கேற்றிந்தனர்.

இதில் விசேஷமாக நடமாடும் பல் சிகிச்சை பிரிவில் பொதுமக்களின் பல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன.

கிராம அமைப்புக்கள், வைத்தியர்கள், தாதியர், சுகாதார அலுவலர்கள், தாதிய மாணவிகள், மற்றும், சமூகம் சார்ந்த ஆர்வலர்கள், பாடசாலை அதிபர் மற்றும் வலையக்கல்விப் பணிப்பாளர், மூக்கு கண்ணாடி வழங்குனர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பிராந்திய சுகாதார பணிமனை பணிப்பாளர் டாக்டர் ஆரா.முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் 100 மூக்குக் கண்ணாடிகளை மட்டக்களப்பு LIONS கழகம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் . ஸ்ரீநாத் வைத்தியர் என்ற ரீதியில் வருகை தந்து மருத்துவ முகாம் நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், இப்பகுதி மக்களின் சுகாதார நிலைமைகளையும் கேட்டறிந்து அப்பகுதிகளுக்கு தொழு நோய் தொடர்பான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளுக்கு உதவுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இவ் மருத்துவ முகாமில் சிகிச்சை பெறுவதற்காக மாணவர்கள் உட்பட சுமார் 250இற்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713915

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time