உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சுகாதார அமைச்சின் அனுசரணையுடன்; மட்டு மாவட்டத்தில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான – போசாக்கு குறைவு தொடர்பான நிகழ்ச்சித் திட்டம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் ஹரிதாஸ் எகெட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் பாலூட்டும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான போசாக்கு குறைவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களிலும் இச்செயலமர்வு இடம்பெற்று வருகிறது

“ட்ரைனிங் ஒன் நியூட்ரிசன் போர் மதர்ஸ்” எனும் தொனிப்பொருளில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் 120 தாய்மார்களுக்கு ஆரையம்பதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அனுசரணையுடன் இது தொடர்பான விளக்கமளிக்கப்பட்டதுடன் போசாக்கு நிறைந்த உணவுப் பொருட்களும், மரக்கறி விதைகளும் தாய்மார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. செங்கலடி ஐயங்கேணியிலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

ஹரிதாஸ் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை அண்டனி ஜெயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஹரிதாஸ் நிறுவன நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எஸ் மைக்கல் விவசாய திணைக்கள போதனாசிரியர்கள் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி தாதியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

விவசாய போதும் ஆசிரியர் மற்றும் சுகாதாரத் திணைக்கள தாதியர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு விரிவுரைகளை நிகழ்த்தினர் .

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசாக்கு நிறைந்த உணவுகளான கடலை பயறு விதைகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714018

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time