ஹிழுரிய்யா பள்ளிவாயலில் இடம்பெற்ற முப்பெரும் விழாவில்; நன்கொடையாளர்கள் கெளரவிப்பு.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி. 02 ஊர் வீதி ஹிழுறிய்யாஹ் மஸ்ஜித் மத்ரஸதுல் ஹிழுரிய்யாவின் முப்பெரும் நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (23) மஸ்ஜித்தில் இடம்பெற்றது.
மஸ்ஜித் உப தலைவர் எம்.சீ.எஸ்.அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் அல் குர் ஆனை முழுமையாக மனனம் செய்த ஹாபிழ்கள் கெளரவிக்கும் நிகழ்வு, 2024 ம் ஆண்டிற்கான அல் குர் ஆன் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், பள்ளிவாயல் காணி கொள்வனவு மற்றும் மத்ரஸா கட்டிட வேலைகளுக்கு உதவிய நன்கொடையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை பொதுச் செயலாளர் மெளலவி எம்.ஐ.எம்.ஜவாஹிர்(பலாஹி) சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மணவர்களின் நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இம் முப்பெரும் விழாவில் பள்ளிவாயல் நிர்வாகிகள், பிரமுகர்கள், உலமாக்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
https://chat.whatsapp.com/InDe6wqB66ADWIlG1VgJU5










