மட்டு மாவட்ட முஸ்லிம்களுக்கு ஹிறா பவுண்டேசனினால் பேரீத்தம்பழம் வழங்கி வைப்பு.!!!
(எம்.ரி.எம்.)
சவூதி அரேபியாவிலுள்ள தனவந்தர்களினால் ஹிறா பவுண்டேசன் நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்ட பேரீத்தம் பழங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இன்று (19) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ்வின் தலைமையில் காத்தான்குடி அல் அக்ஸா பள்ளிவாயலில் நடைபெற்றது.
புனித நோன்பை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் குடும்பங்கள் நோன்பு திறப்பதற்காக காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேச பள்ளிவாயல்கள், சமூக நிறுவனங்களுக்கு பேரீத்தம்பழம் வழங்கி வைக்கப்பட்டது.
ஹிறா பவுண்டேசன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலக பொறுப்பதிகாரி சியாத், அல் அக் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் ஜவாஹிர் Jp உட்பட ஊரின் முக்கியஸ்தர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், சமூக சேவை அமைப்புக்களின் நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன் அடுத்த கட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பிரதேசத்திலுள்ள குடும்பங்களுக்கும் பள்ளிவாயல்கள் ஊடாக வழங்கப்பட உள்ளன.










