உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கிழக்கு பல்கலைக்கழகம் வரலாற்றுச் சாதனை; தேசிய அளவில் 7வது இடம்உலகளவில் 1913வது இடம்.!!!

கிழக்கு பல்கலைக்கழகம் வரலாற்றில் முதன்முறையாக இலங்கை தேசிய பல்கலைக்கழகங்களில் 7வது இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 1913வது இடத்தையும் வெபோமெட்ரிக்ஸ் தரவரிசை வெளியீட்டில் பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தின் உலகளாவிய தெரிவுநிலை, ஆராய்ச்சி திறமை, திறந்த அணுகல் மற்றும் மொத்த கல்வித் திறன் ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையில் கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் போன்றவை தொடர்ந்து முன்னணியில் உள்ளன. இந்நிலையில், கிழக்குப் பல்கலைக்கழகம் 7வது இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கல்வி வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது.

ஹார்வர்ட், ஸ்டான்போர்ட், எம்ஐடி, ஓக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள் மேலிடங்களில் நீடித்துள்ளன. இத்தரநிலைகளுடன் ஒப்பிடுகையில், 1913வது இடம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்ந்து வரும் சர்வதேச கண்ணியத்தையும் ஆய்வுத் தாக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

2022 ஆம் ஆண்டில், கிழக்குப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 12வது இடத்திலும், உலகளவில் 5210வது இடத்திலும் இருந்தது. மூன்று ஆண்டுகளில் தேசிய அளவில் 12வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கும், உலகளவில் 5210வது இடத்திலிருந்து 1913வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

இந்த மாற்றம் உயர் மேற்கோள் கொண்ட ஆய்வுகள், தேசிய–சர்வதேச மாநாடுகள், சமூக நலத் திட்டங்கள், மற்றும் அக்கடமிக் சமூகத்தின் ஒருங்கிணைந்த உழைப்பின் பலனாகும்.

பல்கலைக்கழகத்தின் அக்கடமிக் மற்றும் நிர்வாகக் குழுக்கள் இணைந்து மேற்கொண்ட உழைப்பின் பயனாக இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703013

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time