உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

இலங்கையில் மூன்றாவது முறையாக இடம்பெற்ற: புனித அல் குர்ஆன் மனனப் போட்டி வெற்றிகரமாக நிறைவு.!!!

— 24 மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வைப்பு.

(எஸ். சினீஸ் கான்)

இலங்கை குடியரசில் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட புனித அல் குர்ஆன் மனனப் போட்டியின் நிறைவு விழா, சவூதி அரேபியத் தூதரகத்தின் ஏற்பாட்டில்  திங்கட்கிழமை (12) கொழும்பு ஐடிசி (ITC) ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலாபர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதற்கு மேலாக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், மதத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

புனித குர்ஆனை மனனம் செய்து அதன் போதனைகளை இளம் தலைமுறையிடையே வளர்த்தெடுக்கும் நோக்கில் இப்போட்டி முன்னெடுக்கப்பட்டதாக நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்தனர். இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் நாடு முழுவதும் இருந்து பெருமளவிலான மாணவ, மாணவிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் சிறப்பாகத் திறன் வெளிப்படுத்தி வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு ஆன்மீக விழிப்புணர்வையும், நற்பண்புகளுடன் கூடிய தலைமுறையை உருவாக்கும் முயற்சியையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்ததாக கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703703

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time