உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

வீடுகளை புனரமைக்க; 2 லட்சம் பெறுமதியான காசோலைகள் – 50 பயனாளிகளுக்கு வழங்கி வைப்பு.!!!

கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்க்கு 2 லட்சம் பெறுமதியான காசோலைகள் இன்று (16.08.2025) சனிக்கிழமை அம்பாறை மாவட்ட பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு தமது வீடுகளை பூரணப்படுத்துவதற்காக இந் நிதி வழங்கி வைக்கப்பட்டது.மேலும் 150 பயனாளிகள் மூன்றாம் கட்டத்தில் பயன் பெற இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதியமைச்சர் கௌரவ வசந்த பியதிஸ்ஸ, இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்ரம, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் மற்றும் லகுகல பிரதேச சபையின் உதவி தவிசாளர் ரவிந்திர குணவர்த்தன ஆகியோரின் பங்குபற்றளுடன் நடைபெற்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713921

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time