உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம்: ஆசிரியர் அபிவிருத்தி அதிகாரிகளுடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு.!!!

கொழும்பு, கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, ஆசிரியர் அபிவிருத்தி அதிகாரிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசித்தார்.

கடந்த தேர்தல் காலத்தில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படாததன் காரணமாகவே இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்தர்ப்பத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அபிவிருத்தி அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்துத் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வின்போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அப்துல் வாசித் ஆகியோரும் உடனிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703748

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time