இந்திய கடற்படை போர்கப்பல் ‘INS GHARIAL’ இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்.!!!
● கொழும்பு துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் மரியாதையுடன் வரவேற்பு.
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இந்திய கடற்படையின் போர்கப்பலான ‘INS GHARIAL’ புதன்கிழமை (04) காலை உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்தது. கடற்படை மரபுகளின்படி, இலங்கை கடற்படையினரால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் மரியாதையுடன் வரவேற்கப்பட்டது.
இலங்கையை வந்தடைந்துள்ள ‘INS GHARIAL’ போர்கப்பல் 124.8 மீட்டர் நீளம் கொண்டதாகும். இக் கப்பலின் கட்டளை அதிகாரியாக Commander Gaurav Tewari கடமையாற்றி வருகின்றார்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பில், கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட பத்து (10) தற்காலிக பாலங்கள் (Bailey Bridges), ‘டித்வா’ புயலின் சீரற்ற காலநிலையால் இலங்கையின் பல பகுதிகளில் சேதமடைந்த பாலங்கள் திருத்தி அமைக்கப்படும் வரை, தற்காலிக போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் பேரிடர் மேலாண்மை மையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ‘INS GHARIAL’ இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான நல்லெண்ண உறவுகளை மேம்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கப்பலின் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
அத்துடன், இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கிய இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





