உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

இந்தோனேசிய கடற்படை போர்க்கப்பல் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ இலங்கை வருகை.!!!

(கற்பிட்டி நிருபர் – சியாஜ்)

இந்தோனேசிய கடற்படையின் ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ என்ற போர்க்கப்பல், விநியோக மற்றும் தளவாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வியாழக்கிழமை (22) இலங்கையை வந்தடைந்தது. குறித்த கப்பலை இலங்கை கடற்படை, கடற்படை மரபுகளுக்கு அமைவாக கொழும்பு துறைமுகத்தில் உத்தியோகபூர்வமாக வரவேற்றது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Sigma Corvette FS வகையைச் சேர்ந்த ‘KRI SULTAN ISKANDAR MUDA – 367’ போர்க்கப்பல், 90.71 மீட்டர் நீளத்தைக் கொண்டதாகும். இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் Annugerah Anurullah கடமையாற்றி வருகின்றார்.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், போர்க்கப்பல் குழுவினர் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா மற்றும் கவர்ச்சிகரமான இடங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தோனேசிய கடற்படைகளுக்கிடையே தொழில்முறை அறிவு பரிமாற்றம், அனுபவ பகிர்வு, இடைச்செயல்பாடு மற்றும் பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703721

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time