ஈரானில் பசீஜ் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்: மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்.!!!
மத்திய கிழக்கில் பதற்ற நிலை அதிகரித்து வரும் நிலையில், அல்-ஜெஸிரா வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதலில் ஈரானின் பசீஜ் (Basij) துணை ராணுவப் படையின் தளபதி கொலாம்ரெசா சுலைமானி (Gholamreza Soleimani) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் தெஹ்ரான் (Tehran) நகரின் மையப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. தாக்குதலில் பசீஜ் படையின் துணைத் தளபதிகள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக ஈரான் (Iran) தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
இதனுடன் தொடர்புபட்டு, ஈரானின் முக்கிய அரசியல் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani) மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவரது நிலைமை குறித்து இதுவரை தெளிவான தகவல் எதுவும் வெளிவரவில்லை.
இந்த சம்பவத்தையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் பதற்றமடைந்துள்ளது.