உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ஈரானுக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக்க டெல்டா ஃபோர்ஸ் வீரர்கள் பிடிபட்டதாக தகவல்.!!!

அமெரிக்காவின் சிறப்பு இராணுவப் பிரிவான டெல்டா ஃபோர்ஸ் (Delta Force) வீரர்கள் ஈரான் நாட்டின் உள்ளே ரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள முயன்றதாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்து சிலர் ஈரான் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை மிகவும் ரகசியமான இராணுவ முயற்சியாக இருந்ததாகக் கூறப்படுகின்ற நிலையில், அது எதிர்பார்த்தபடி நடைபெறாமல், சூழ்நிலை விரைவாக ஈரான் பாதுகாப்பு அமைப்புகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கங்கள் இதுவரை அமெரிக்கா அல்லது ஈரான் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஈரானில் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்நாட்டின் தலைமை தொடர்பான தீர்மானங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

குறிப்பாக, காமினியின் மகன் முஸ்தபாவை தலைமைப் பொறுப்பிற்கு நியமித்தமை தொடர்பாக சில தரப்புகளில் எதிர்ப்பும் விமர்சனங்களும் எழுந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த பின்னணியில் அமெரிக்க அரசியல் வட்டாரங்களிலும், வெள்ளை மாளிகையிலும் மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து கவலை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 810909

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time