உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

கடலில் மிதந்து வந்த மர்மப் பொருள்; திறந்து பார்க்க முற்பட்ட இளைஞன் படுகாயம்.!!!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மர்மப் பொருளொன்று மிதந்து வந்துள்ளது.

மிதந்துவந்த பொருளை திறந்து பார்க்க முற்பட்டபோது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (03) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த 23வயதுடைய வரதராஜன் என்னும் இளைஞனே படுகாயமடைந்துள்ளார்.

இவர் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நான்கு இளைஞர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது குறித்த பொருள் கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை திறக்கமுற்பட்டபோதே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718940

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time