உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி முகாமை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.!!!
நீர்ப்பாதுகாப்பு விழிப்புணர்வை மாணவர் மத்தியில் கொண்டு சேர்த்து நீராபத்துக்களால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் நோக்கில் கல்குடா மூவ் டைவர்ஸ் அமைப்பினால் நீச்சல் பயிற்சி முகாம் நடாத்தப்பட்டு வருகின்றது.
அதன் தொடரில் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 2024.05.19 முதல் 02.02.2025 வரை இடம்பெற்ற அடிப்படை நீச்சல் பயிற்சிநெறியில் கலந்து கொண்ட நிந்தவூர் அல் மினா வித்தியாலய
மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் நேற்று அண்மையில் (16) பாடசாலையில் இடம்பெற்ற காலை ஆராதனையின் போது வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த சான்றிதழ்களை பாடசாலையின் அதிபர் எம்.ரீ.நெளபல் அலி, உதவி அதிபர் திருமதி ஸாமிலா ஹிதர் முஹம்மது, ஆசிரியர்களான ஏ.எம்.நியாஸ், எஸ்.ஸாஹிர் முஹம்மது, ஏ.முஹம்மது ஸம்ஸீர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
நீச்சல் பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட மூவ் டைவர்ஸ் அணியினருக்கும் அதன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் இப்றாஹீம் உட்பட பயிற்றுவிப்பாளர்களுக்கும் நிந்தவூர் அல் மினா வித்தியாலய அதிபர் நன்றி தெரிவித்தார்.
