உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் 2026/27: சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் மீண்டும் தலைவராக போட்டியின்றி தெரிவு.!!!

(பாறுக் ஷிஹான்)

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான தலைவியாக மீண்டும் போட்டியின்றி ஏகமானதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்க வரலாற்றில் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிகா சாரிக் காரியப்பர் 2025/26ஆம் ஆண்டுக்கான முதல் பெண் தலைவியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் கடந்த புதன்கிழமை(18) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026/27ஆம் ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இதன் போது கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2026/27 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் போட்டியின்றி மீண்டும் தெரிவாகியுள்ளார்.

இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வரலாற்றில் முதல் தடவையாக கடந்த 2025/26ம் ஆண்டுக்கான சங்கத் தலைவராக முதல் பெண் தலைவியாக அவர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் சங்கத்தின் தலைவராக செயற்பட்டிருந்த அவர் சட்டத்துறை தொடர்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதுடன் சட்டத்தரணிகளின் தேவைகள் அவர்களுக்கான நலத்திட்டங்கள் என்பவற்றில் பல்வேறு முன்னெடுப்புக்களை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இவர் மீண்டும் 2026/2027 ஆம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டமையானது கல்முனை சட்டத்தரணிகள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தொடர்ந்து செயலாளர்,பொருளாளர், உள்ளிட்ட இதர பதவி நிலைகளுக்கும் ஏனைய நிருவாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வருட செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம் நவாத் உட்பட பொருளாளராக சீ.ஐ. சஞ்சித் அஹமட்டும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் கல்முனை மஹ்மூது மகளீர் கல்லூரி மற்றும் இலங்கை சட்டக்கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியுமாவர்.அத்துடன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவிகள் சங்க செயலாளரான சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா சாரிக் காரியப்பர் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினராக சிறப்பாக செயற்பட்டுள்ளதுடன் சிரேஷ்ட சட்டத்தரணி சாரிக் காரியப்பரின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703798

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time