காங்கேயனோடை – மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையிலான பஸ் சேவை; மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
நீண்ட காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த காங்கேயனோடைக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் இடையிலான பழைய கல்முனை வீதி வழியான பஸ் சேவை மீண்டும் இன்று (14) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பெளஸான் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண ஆளுனரின் இணைப்பாளர் அப்துல்லாஹ், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய செயலாற்று முகாமையாளர் உவைஸ், இலங்கை போக்குவரத்துச் சபை காத்தான்குடி முகாமையாளர் நசார்தீன், மண்முனைப் பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த பஸ் சேவையானது தினமும் காலை 5.45 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை சேவையில் ஈடுபடவுள்ளதுடன் காங்கேயனோடை, ஆரையம்பதி, காத்தான்குடி, நாவற்குடா, நொச்சி முனை, கல்லடி ஊடாக சென்று மட்டக்களப்பு. போதனா வைத்தியசாலை வரை பயணிக்கவுள்ளது.
காங்கேயனோடை மக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு எடுத்த நடவடிக்கையின் பேரில் இந்த பஸ் சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.