உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கட்சியின் தீர்மானத்தை மீறிய; இரு தவிசாளர்கள் இடைநிறுத்தம்.!!!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு, கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்பட்ட இரு பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

கட்சியின் தீர்மானத்தை மீறி தவிசாளர் பதவியை பொறுப்பேற்ற கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எச்.பைறூஸ் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.அஸ்பர் ஆகியோரை கட்சியிலிருந்து இடைநிறுத்தி, கடந்த 03ஆம் திகதி கடிதம் அனுப்பப்ட்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இனைந்து, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு, தங்களுக்கான தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸின் முழுமையான ஆதரவுடன் பெற்றுக்கொண்டு கட்சியின் தீர்மானத்தை மீறி, அப்பிரதேச மக்களின் வாக்குகளுக்கு மாற்றமாக செயற்பட்டிருந்தார்கள் என்பதற்கமைவாகவே அவர்கள் இருவரும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714000

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time