உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 15, 2026

Hot News

IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!
IMG-20260301-WA0055
வளைகுடா போரும்: அழிவை நோக்கிய நகர்வுகளும்.!!!

கதிர்காமம் –  யாத்திரை பஸ் பாரிய விபத்து; சாரதி, நடத்துனர்கள் உட்பட பலர் படுகாயம்.!!!

(ஜே.கே)

கதிர்காமம் சென்று திரும்பிய யாத்திரியகர்ளை ஆரையம்பதியில் இறக்கிவிட்டு திரும்பிய பேரூந்து கிரான்குளத்தில் விபத்தில் சிக்கியது

இன்று காலை (30) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்துச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது கதிர்காமம் புனித யாத்திரையை நிறைவு செய்த யாத்திரிகர்களை ஆரையம்பதியில் இறக்கி விட்டு மட்டு கல்முனை சாலை வழியே தேற்றாத்தீவு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேரூந்து கிரான்குளம் சரஸ்வதி வித்தியாயலயத்திற்கு அருகாமையில் பயணிக்கும் போது வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த வம்மி மரத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இடம்பெறும் போது பேரூந்தில் பஸ் சாரதியும் உதவியாளர்கள் இருவரும் இருந்துள்ள நிலையில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தோர் பாண்டிருப்பு களுதாவளை பகுதியை சேர்ந்தவர்களாகும். விபத்தில் பேரூந்து பாரிய சேதத்துக்குள்ளான நிலையில் வம்மி மரமும் முறிந்து வீதியில் விழுந்துள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 703348

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time