1500 பேர் பங்கேற்ற இப்தார் நிகழ்வு காத்தான்குடியில்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் கண்டியைச் சேர்ந்த தனவந்தர் எஸ்.எம்.நசீர் கான் அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்பில் 1500 பேருக்கான இப்தார் நிகழ்வு இரண்டாவது தடவையாக நேற்று (07) பள்ளிவாயலில் இடம்பெற்றது.
பள்ளிவாயலின் பிரத பேஷ் இமாம் இல்ஹாம் மதனி அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இப்தார் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பள்ளிவாயல்களின் இமாம்கள், நிர்வாகிகள், ஊர்ப் பிரமுகர்கள், சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விஷேட துஆப் பிரார்த்தனையினை காத்தான்குடியின் மூத்த உலமா ஏஜீ.எம்.அமீன் பலாஹி நடாத்தியதோடு, பெருமளவிலான பெண்களும் இப்தார் நிகழ்வில் பங்குபற்றி இருந்தமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இதுபோல 1000 பேருக்கான இப்தார் நிகழ்வினை ஏற்பாடு செய்து நடாத்த உதவிய கண்டியைச் சேர்ந்த தனவந்தர் எஸ்.எம்.நஸீர் கான் அவர்களை கெளரவித்து காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாகத்தினால் கடந்த திங்கட்கிழமை (03) இரவு நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





