வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்படும்: காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேசங்களை; நேரில் சென்று பார்வையிட்டார் – கந்தசாமி பிரபு.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் பகுதிகளை “வருமுன் காப்போம்” எனும் திட்டத்தினூடாக முன்னேற்பாடு செய்யும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையிலான குழுவினர் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்குற்பட்ட கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
டீன் வீதி மற்றும் ஹைறாத் கிராமத்தில் முறையான தோணாவடிகான்கள் அமைக்கப்படாமையினாலேயே ஒவ்வொரு வருடமும் வெள்ள அனர்த்தத்தினால் தாம் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவருவதாக அப்பகுதி மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் முறையிட்டதையடுத்து, அக்கிராமங்கனை ஊடருத்துச் செல்லும் பெரிய தோணா தொகுதியையும், நீர் அதிகம் தேங்கி காணப்படும் பகுதிகளையும் பார்வையிட்டதுடன், இதுவரை அபிவிருத்தி செய்யப்படாமல் பொது மக்களுக்கு அவசியமாக காணப்படும் வீதிகளையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.
இவ்விஜயத்தில் சுற்றாடல் அமைச்சின் இணைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் நழீமி, தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் முகம்மட் நசீர் உட்பட தொழினுட்ப உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.