உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

காத்தான்குடி கடலில் கரையோரத்தில் பிடிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சூடை மீன்கள் மீனவர்கள் மகிழ்ச்சி.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் கரையோரத்தில் இன்று காலை அதிக அளவிலான சூடை மீன்கள் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

சாதாரணமாக வாவியோரங்களில் பிடிப்பதை போன்று கடலின் கரையோரத்தில் நின்று கொண்டு வீச்சு வலையூடாகவும்,சாதாரண சிறிய தோணிகளூடாகவும் குறித்த சூடை மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

கள்ளச்சூடை எனப்படும் இம்மீன்கள் நடுக்கடலில் இருந்து பெருமளவில் கரையோரத்திற்கு வந்துள்ளமையினால் கரையோரத்தில் இருந்தே அதிக அளவிலான மீனவர்கள் மீன்களை பிடிப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது

அதிக அளவிலான கள்ளச்சூடை மீன்கள் பிடிபடுவதால் சாதாரண நாட்களில் 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனை செய்யப்படும் இம்மீன்கள் இன்று காலை வரும் 200 ரூபாய்க்கு ஒரு கிலோ விற்பனை செய்யப்பட்டதையும் காண முடிந்தது

பாரிய படகுகளிலும் வள்ளங்கள் மற்றும் இயந்திர படகுகளிலும் சென்று ஆழ்கடலில் மீன் பிடிக்கின்ற மீனவர்கள் இன்று காலை சாதாரணமாகவ அலைகளில்லாத ஆற்றங்கரை ஓரங்களில் மீன் பிடிப்பதை போன்று காத்தான்குடி கடற்கரையில் கரையோரத்தில் மீன்பிடிப்பதை பலரும் அதிசயமாக பார்த்தவுடன் கரையோரத்துக்கு வந்து குறைந்த விலையில் மீன்களையும் கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது

இதனால் மீனவர்கள் பெரும் இலாபம் அடைந்துள்ளதுடன் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718048

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time