“ஒரு செழிப்பான தேசம் – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில்; காத்தான்குடி கடற்கரையில் – சிரமதானம்.!!!
(எம்.ரி.எம்.யூனுஸ்)
“ஒரு செழிப்பான தேசம் – அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நினைவுகளுடன் சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டத்திற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவும் காத்தான்குடி நகர சபையும் இணைந்து காத்தான்குடி கடற்கரையை சுத்தப்படுத்தும் சிரமதான நிகழ்வு இன்று (08) காத்தான்குடி நகர சபை தவிசாளர் SHM.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.
இச்சிரமதான நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா, தலைமைப் பீட சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் திருமதி பத்மா ஜெயராஜ், சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஆர்.வாமதேவன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், சமுர்த்தி வங்கி முகாமையார்கள், நகரசபை நிருவாக உத்தியோகத்தர் றினோஸா முப்லி மற்றும் நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் நகர சபை உத்தியோகத்தர்கள், இரானுவத்தினர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றிய உறுப்பினர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள், காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள், ஹிழுரியா சனசமூக நிலைய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.













