உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மத்திய கல்லூரியின்;  “BEST STUDENT” விருது வழங்கல்.!!!

காத்தான்குடி மத்திய கல்லூரியின் மாணவர்களை ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த முன்மாதிரி மாணவர்களாக உருவாக்குவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட “BEST STUDENT” விருது வழங்கல் நிகழ்வு இன்று (07) காலை ஒன்றுகூடலின் போது வழங்கி வைக்கப்பட்டது.

கல்லூரியின் பிரதி அதிபர் எம்.என்.எம் பொளஸான் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பகுதித் தலைவர்கள், வகுப்பாசிரியர்கள் விசேடமாக விருது பெறும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இன்றைய நாள் தெரிவு செய்யப்பட்ட சிறந்த மாணவராக முஹம்மட் தஸ்னீம் முஹம்மத் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு சின்னம் மற்றும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வாரு பகுதி ரீதியாக ஒரு மாணவர் தெரிவு செய்யப்பட்டு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

பாடசாலைக்கு தொடர்ச்சியாக வருகை தருதல், நேர்த்தியான சீருடை அணிந்திருத்தல், ஆசிரியர்களை மதித்து நடத்தல், பாடசாலையின் செயற்பாடுகளில் பங்காற்றல் போன்ற பல்வேறு விடயங்கள் அவதானிக்கப்பட்டு வகுப்பாசிரியர்கள், பகுதித் தலைவர்கள் ஊடாக சிறந்த மாணவர்களைத் தெரிவு செய்யும் குழுவின் உறுதிப்படுத்தலுடன் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

தற்கால சூழலில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் சிறந்த பண்பாடுடைய மாணவர் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் இச்செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714002

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time