உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மின்சார சபைக்கான காணி; நிரந்தரமாக ஒப்படைப்பு.!!!

காத்தான்குடி மின்சார சபைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காணியில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தாய் சேய் பராமரிப்பு நிலையம் நடத்தப்பட்டு வந்தது.

மின்சார சபை பயன்பாட்டுக்காக இந்த கட்டிடம் வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கூறப்பட்டு வந்தபோதும் இக் கட்டிடம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் விடுவிக்கப்படாமல் இருந்தது.

இதனை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் நகர முதல்வர் SHM . அஸ்பர் JP அவர்களால் மேற்கொள்ளப்பட்டு இன்று (09) திங்கள்கிழமை நகர முதல்வர் அலுவலகத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முன்னிலையில் காத்தான்குடி சுகாதார வைத்திய அத்தியட்சகர் Dr நஸ்ருதீன் அவர்களால் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மொளஜூத் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்வரும் 6 மாதங்களில் இந்த கட்டிடம் மின்சார சபையினால் திருத்தம் செய்யப்பட்டு மின்சார சபையின் பிராந்திய காரியாலயமாக இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714065

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time