காத்தான்குடி மத்தி மற்றும் தெற்கு கிராம உத்தயோகத்தர் பிரிவுகளுக்கு; முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்கு – விண்ணப்பம் கோரல்.!!!
முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்
காத்தான்குடி மத்தி (கிராம உத்தயோகத்தர் பிரிவுகள் – 165B,165, 164,164C,162 )
காத்தான்குடி தெற்கு (கிராம உத்தயோகத்தர் பிரிவுகள் – 164A, 162A,162B,164B )
மேற்குறித்த முஸ்லிம் விவாகப் பிரிவுகளுக்கான முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் 2025.07.18ந் திகதிய அரச வர்த்தமானப் பத்திரிகை மூலம் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத்திகதி – 20.08.2025
தகைமைகள் –
1. குறித்த கிராம உத்தயோகத்தர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும், விவாகமான முஸ்லிம் ஆணாகவும் இருத்தல் ( விவாகரத்தானவராகவோ தாரமிழந்தவராகவோ இருத்தல் கூடாது)
2. வயது 30 வருடங்களுக்கு குறையாமலும் 55 வயதிற்கு மேற்படாமலும் இருத்தல்.
3. க.பொ.த.(சா/த) பரீட்சையில் இரண்டு தவணைகளுக்கு மேற்படாத வகையில் தமிழ்மொழி உட்பட 02 பாடங்களில் சிறப்பு சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் அல்லது அதற்கு சமமான பரீட்சையில் சித்திபெற்றிருத்தல்.
மௌலவி சான்றிதழ் அல்லது அராபி டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல் மேற்குறிப்பிட்ட அடிப்டைத் தகைமகளை பூர்த்திசெய்திருத்தலாகக் கருதப்படும்.
4. குறித்த விவாகப் பிரிவில் அலுவலகம் ஒன்றை வைத்திருக்கக் கூடிய இயலுமை பெற்றிருத்தல்.
இது தொடர்பான அறிவித்தலை மாவட்ட செயலகம் மட்டக்களப்பு, காணி மாவட்ட பதிவகம் மட்டக்களப்பு, காத்தான்குடி பிதேச செயலகம், உரிய கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், காத்தான்குடி சமுர்த்தி வலயக் காரியாலயங்கள், காத்தான்குடி பிரதான தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் பார்வையிடலாம்.
விண்ணப்பங்ளையும் கிராம பட்டியல்களையும் மாவட்ட செயலகம், காணி மாவட்ட பதிவகம் மற்றும் காத்தான்குடி பிதேச செயலகம் ஆகிய அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் www.rgd.gov.lk இணையத் தளத்திலும் பெற்றுகொள்ள முடியும்.