உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் யாசகம் கேட்டு; பொதுமக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் – யாசகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.!!!

(எம் எஸ் எம் நூர்தீன்)

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் யாசகம் கேட்டு பொதுமக்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவர்கள் தொடர்பில் யாசகர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத் தெரிவித்தார்

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் (18) திங்கட்கிழமை இடம்பெற்ற வாராந்த முன்னேற்ற மீளாய்வுக்கூட்டத்தின் போதே இந்த கருத்தை பிரதேச செயலாளர் வெளியிட்டார்

காத்தான்குடியில் சில முக்கிய இடங்களில் வெளியூர்களில் இருந்து சிலர் வந்து யாசகம் கேட்டு நிற்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு அசெளகரியங்கள் ஏற்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் சிரமங்களை சந்திப்பதாகவும் பிரதேச செயலாளர் நிஹாறா மெளஜூத் சுட்டிக் காட்டினார்

இது தொடர்பாக காத்தான்குடி குட்வின் சாந்தி மீதி சமிஞ்சை விளக்கு பொருத்தப்பட்டிருக்கின்ற பகுதி மற்றும் இது போன்ற இன்னும் சில பகுதிகளில் வெளியூரிலிருந்து யாசகம் கேட்டு வந்து இந்த பகுதிகளில் சிலர் பொதுமக்களுக்கு அசெளக் காரியங்களை ஏற்படுத்துவதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார் அத்துடன் வெளியூர்களில் இருந்து வரும் சில சிறுவர்களும் யாசகம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு காத்தான்குடி பொலீசாருடனும் காத்தான்குடி நகர சபையுடனும் இணைந்து வேலைத்திட்டம் ஒன்றை முன் கொண்டு செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டார்

இது தொடர்பாக காத்தான்குடி பொலீசாருக்கு கடிதம் ஒன்றை எழுதி இதை கட்டுப்படுத்தும் வேலை திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

இதையடுத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் ரசூல் ஷா உட்பட உத்தியோகத்தர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்

காத்தான்குடி பொலிசாருக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதுடன் காத்தான்குடி நகர் சபையுடன் இணைந்து வேலை திட்டத்தை முன்னெடுக்க இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அத்துடன் பொதுசன உதவி தொடர்பில் பிரதேச செயலகத்தை இப்படியானவர்கள் நாடி அந்த உதவியை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் குறிப்பிட்டார்

இந்த கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் ஜரூப் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதிஷ பத்மா ஜெயராஜ் உட்பட பிரதேச செயல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713911

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time