உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 25, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

காத்தான்குடியில் புதிய பிரதேச செயலாளருக்கு வரவேற்பு.!!!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடிக்கு புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று (16) சம்மேளத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் புதிய பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது..

குறித்த நிகழ்வில் சம்மேளன பிரதி தலைவர்களான எம்.சீ.எம்.ஏ.சத்தார், மர்சூக் அகமட் லெவ்வை மற்றும் சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது சம்மேளன பிரதி தலைவர் சத்தார் அவர்களினால் சம்மேளனம் தொடர்பான அறிமுகம், அதன் செயற்பாடுகள் தொடர்பாக விஷேட உரை நிகழ்த்தப்பட்டதோடு, பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களும் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வினை சம்மேளத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.எம்.இல்ஹாம் பலாஹி நெறிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 719081

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time