உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன்; குபா பள்ளி வாவி பகுதியில் ஜனாஸாவாக மீட்பு.!!!

(எம்.ரி.எம்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்று (08) காலை காணாமல் போன சிறுவன் காத்தான்குடி குபா பள்ளி ஆற்றங்கறைப் பகுதியில் முற்பகல் 11 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி 5ம் குறிச்சி ஊர் வீதியைச் சேர்ந்த அனஸ் சுலைம் அப்துல்லாஹ் (06) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

காலையில் வீட்டை விட்டுச் சென்ற அவர் காணாமல் போயிருந்த நிலையில் பெற்றோர், குடும்பத்தினர், அயலவர்கள் அவரை தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் வாய் பேச முடியாத விசேட தேவையுடையவராகும்.

சடலம் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி குபா ஜும்ஆப் பள்ளிவாசல் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரத்னாயக்காவின் தலைமையில் சென்ற பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714067

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time