உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி நகரசபை தேர்தலில்; 16 ஆசனங்களை கைப்பற்றுவோம் – கலாநிதி ஹிஸ்புழ்ழாஹ்.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், காத்தான்குடி நகர சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் காத்தான்குடி பதுரியா வட்டார வேட்பாளர் அல்-ஹாபிழ் மெளலவி MIM.அஜ்வத் பலாஹி அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு அப்துல் கபூர் அவர்களின் தலைமையில் நேற்று (19) இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றினார்.

அவர் தனதுரையில், காத்தான்குடியின் பத்து வட்டாரங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயம் இலகுவாக கைப்பற்றும் எனவும், மாற்று கட்சிகளினால் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் எமக்கு போட்டியான வேட்பாளர்களாக இல்லை. அத்தோடு எம்மோடு இணைந்து போட்டி இடுகின்ற ஏனைய கட்சிகள் மற்றும் சுயேற்சைக் குழுக்கள் இன்னும் ஆறு ஆசனங்களை பெறும், அதனூடாக காத்தான்குடி நகரசபையின் அதிகாரத்தை முழுமையாக நாங்கள் கைப்பற்றுவோம் என்றார்.

இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா ஹிரா பெளன்டேசன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், காத்தான்குடி பிரதேச கட்சியின் மத்திய முழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714173

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time