உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி மீடியா போரத்தின் 25வது ஆண்டு விழாவும்; கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் ஒன்று கூடலும்.!!!

காத்தான்குடி மீடியா போரத்தின் 25வது ஆண்டு நிறைவு விழாவும், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்று கூடலும் நாளை (14) மாலை 7.30 மணிக்கு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள தனியார் விடுதியில் இடம்பெறவுள்ளதாக மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஐ.அப்துல் நாசர் தெரிவித்தார்.

இரண்டு அமர்வுகளாக நடைபெறும் இந்நிகழ்வில் முதலாவது அமர்வு காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள சகா மெரீன் வெங்கட் மண்டபத்தில் ஊடகவியலாளர்களின் அறிமுக நிகழ்வு நிறைவுற்றதும், இரண்டாவது அமர்வு குறித்த மண்டபத்திற்கு முன்னால் உள்ள கடற்கரை திறந்த வெளியில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ளும் பட்டிமன்றம், நாடகம் உட்பட கலை இலக்கிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் நாளையதினம் மாலை 6:30 மணிக்கு புதிய காத்தான்குடி அல் அக்‌ஷா ஜும்மா பள்ளிவாசலுக்கு வருகை தருமாறு மீடியா போரத்தின் செயலாளர் எம் ஐ அப்துல் நாசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714054

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time