உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில்; போஷாக்கு கண்காட்சி.!!!

(எம் எஸ் எம் நூர்தீன்)

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போஷக்கு கண்காட்சி (24) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது

தேசிய போஷாக்கு மாதத்தினை யொட்டி காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்நினால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

காத்தான்குடி சுகாதா வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலுள்ள அன்னையர் ஆதரவு குழுக்களினால் போஷாக்கு உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

இதில் உணவு வகைகள் மரக்கறி வகைகள் இலைகள் உணவு வகைகள் போஷாக்கான மற்றும் போஷாக்கற்ற உணவுகள் வைக்கப்பட்டிருந்ததுடன் விழிப்புணர்வும் மேற் கொள்ளப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் நசிர்தீன் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.சரவணபவன் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா

தாய் சேய் நல சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிதுர்சுதன் பொது சுகாதார தாதிய சகோதரி செல்வி ஜீவராணி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பஷீர் உட்பட பொதுச் சுகாதார அதிகாரிகள் சுகாதார அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714030

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time