உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் பாரிய இடி, மின்னல் தாக்குதல்; இரு வீடுகளில் மின்சார உபகரணங்கள் – சீசீரிவி முற்றாக தீயினால் நாசம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரீட் நகரில் இரு வீடுகளில் இன்று (15) இரவு பாரியளவிலான இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டதில் குறித்த வீடுகளிலிருந்த அனைத்து மின்சார உதிரிப்பாகங்களும் தீப்பற்றி முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதுடன், சீசீரிவி கமறாக்களும் பற்றி எரிந்துள்ளன.

குறித்த வீடுகள் அமைந்துள்ள வளவில் தென்னை மரத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்டு மரம் பற்றி எரிந்துள்ளதுடன் அருகிலுள்ள வீடுகளும் இடித்தாக்கத்தினால் பற்றி எரிந்துள்ளன.

இச்சம்பவத்தின் காரணமாக அருகில் உள்ள மேலும் சில வீடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் மயங்கி விழுந்த சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714117

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time