காத்தான்குடி பொலிஸ் பிரிவில்; முதலை இழுத்துச் சென்ற மீனவர்.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்முனை பாலத்தை அண்டிய களப்பு பகுதியில் இன்று (20) மாலை மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவரை முதலை பிடித்து இழுத்துச் சென்றுள்ள நிலையில் அவரை தேடும் பணி முன்னெடுக்கப்படுகிறது
நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த 35 வயதுடைய நபர் புதுக்குடியிருப்பு பகுதியில் திருமணம் முடித்து இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் மண்முனை பாலத்தில் இறால் பிடிப்பதற்காக களப்பில் பெற்றோல்மெக்ஸ் விளக்கை எரியவைப்பதற்காக கம்பு ஒன்றை நட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே முதலை குறித்த மீனவரை இழுத்துச்சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




