ஐஸ், கேரளா கஞ்சா, கசிப்பு, சிகரெட்டுகளுடன் 42 பேர்; காத்தான்குடி பொலிஸாரால் கைது.!!!
(ஜே.கே)
ஐஸ், கேரளா கஞ்சா, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்
57 லீற்றர் கசிப்புடன் 25 பேரும், ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருமாக 42 பேர் பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கர்பலா, கல்லடி, புதிய காத்தான்குடி, தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுத்தி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி போலீசார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


