காத்தான்குடியில் இடம்பெற்ற; முன்பள்ளி ஆசிரியர்களுக்கான – செயற்கை நுண்ணறிவோடு விளையாடு செயலமர்வு.!!!
தொழில்நுட்ப அறிவின் மூலம் நாட்டினைக் கட்டியெழுப்பும் விதமாக, பிஸிலங்கா சமூகத் தொழில்முனைவு நிறுவனமானது, நாஸ் கெம்பஸ் உடன் இணைந்து நடாத்திவரும் ”AI யோடு விளையாடு” என்ற செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றிய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான இலவச வழிகாட்டல் செயலமர்வு கடந்த (17) காத்தான்குடி நாஸ் கெம்பஸ் பிரதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில், காங்கயனோடை, பாலமுனை, சிகரம், பூநொச்சிமுனை, காத்தான்குடி போன்ற 40க்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இதில் AI பற்றிய அறிமுகத்தை விட்ஸ்பெர்ரி தலைமை இயக்குனர், எம்.இஸட்.ரிகாஸ் (BSc CS, PGDSML) அவர்களும், AI யின் பயன்பாடு பற்றி பிஸிலங்கா நிறுவுனர் கே.எம்.மஸாஹிம் அவர்களும், பாலர் கல்வியில் AI யின் பிரயோகம் பற்றி எம்.எப்.ரிஸ்னி (BSc IT (Hons) ) அவர்களும் விரிவுரை நிகழ்த்தினர்.
அத்துடன், நாஸ் கெம்பஸின் முதல்வர், டாக்டர் ஐ.எல்.எம்.ரிபாஸ் MBBS, MSc,MD (Colombo) LLB (HND), D/RDHS – Ampara மகளிரின் ஆற்றல்களை AI போன்ற பல்வேறு துறைகளிலும் வெளிக்கொணர வேண்டியதன் அவசியம் பற்றிய விஷேட உரையினை ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.








