காத்தான்குடியில் பல்துறை சாதனையாளர்கள் கெளரவிப்பு.!!!
(எம்.பஹத் ஜுனைட்)
காத்தான்குடி ஸாலிஹ் அல் குர்ஆன் மத்ரஸாவில் அல் குர்ஆனை கற்று வெளியேறிய 65 மாணவர்களை கெளரவிக்கும் விழா நேற்று (16) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
மத்ரஸாவின் அதிபர் மெளலவி எம்.எஸ்.எம்.அஸார் தலைமையில் இடம்பெற்ற 33 ஆவது விழாவில் 65 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன் உயர்நிலை அடைந்த இம் மத்ரஸாவின் பழைய மாணவர்கள் மற்றும் சமூகத்தில் பல துறைகளிளும் சேவையாற்றிவரும் முக்கியஸ்தர்களுக்கு அதி உயர் கெளரவ விருது வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மெளலவி எம்.ஐ.ஆதம்லெப்பை (பலாஹி) பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
















