உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி நகரில் சுப்பர் மார்க்கெட்டில் பாரிய தீ; வர்த்தக நிலையம் தீப்பற்றி நாசம்.!!!

(ஜே.கே)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் இன்று (31) நண்பகல் சுப்பர் மார்க்கட் வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டது.

காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள பல்பொருள் அங்காடி வர்த்தக நிலையம் ஒன்றினுள் ஏற்பட்ட பாரிய தீ பரவல் காரணமாக வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதனால் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினர், காத்தான்குடி நகரசபை தீயணைப்பு படையினர் குறித்த இடத்திற்கு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் வர்த்தக நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது . அங்கிருந்த பொருட்கள் பொலிசார் மற்றும் தொண்டர்களினால் ஓரளவு காப்பாற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 714084

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time